மக்கள் நலவாழ்வுதுறை மா. சுப்ரமணியன் மதுராந்தகத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது நேரடியாக அங்கிருந்து மருத்துவர்கள் அறைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியில் இருந்த மருத்துவர்களிடம் தகவல்களை கேட்டறிந்தார். அதன் பின் பணிக்கு வராத மருத்துவர்களின் விவரங்களையும் கேட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 4 மருத்துவர்களில் ஒருவரும் மருத்துவமனையில் பணியில் இல்லை. இதனால் பணி நேரத்தில் மருத்துவமனைக்கு வராத 4 மருத்துவர்களையும் அமைச்சர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மருத்துவமனை சரியான முறையில் செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்வதற்கு அவ்வபோது மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்யாமல் இருந்த மருத்துவ இணை இயக்குனரை பணியிடை மாற்றம் செய்யவும் அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.