அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகின்றது. இன்று மூன்றாவது முறையாக வழக்கு விசாரணை ஏதும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வழக்கை ஒத்திவைக்க கேட்டிருந்தார்.
அதற்கு பிறகு அலுவல் தினத்தில் கடைசி வழக்காகப்பட்டியிடப்படும் நேரமின்மை காரணமாக வேறொருநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைய தினமும் கடைசி வழக்காக பட்டியலிடப்பட்டிருந்தது நான்கு மணிக்கு மேல் தான் வழக்கு விசாரணைக்கு வந்தது. எனவே அலுவல் நேரம் முடிந்துவிட்டது.
தாங்கள் ஏற்கனவே விசாரணைக்கு எடுத்த வழக்கெல்லாம் இன்னும் முடிக்காமல் இருக்கிறோம். நீங்கள் கேட்டுக் கொண்டீர்கள் என்பதற்காகத்தான் நாங்கள் வியாழக்கிழமை இன்றைய தினத்திற்கு இந்த வழக்கை போட்டிருந்தோம். ஆனால் அலுவல் நேரம் முடிந்துவிட்டது. எனவே வேறு ஒரு நாளைக்கு போடுகிறோம் என்று சொன்னார்கள்.
உச்ச நீதிமன்றம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக இரண்டு வார காலம் விடுமுறை. எனவே 2023 ஜனவரி மாதம் 4ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது. மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு நாங்கள் எடுத்துக் கொள்கின்றோம் என அறிவித்திருக்கிறார்கள். எனவே 4ஆம் தேதி 2 மணிக்கு நிச்சயமாக இந்த வழக்கின் விசாரணை விரிவாக நடைபெறும் என தெரிகின்றது.