Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.3000….? தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!

தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது.

அதாவது அரசு 2023 ஆம் வருடம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்க தொகையும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இதுவரை இதுகுறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் பொங்கலுக்கு ரூபாய் 3000 அரசு வழங்க வேண்டும் என்று அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |