Categories
தேசிய செய்திகள்

சாத்வீக உணவு சேவை…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

சுத்தமான சைவ உணவு (சாத்வீக உணவு) உண்பவர்களுக்காக ரயில்வேயில் புது ஏற்பாடு துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில்வே அமைச்சகத்தின் புது உத்தரவுக்கு பின், இனிமேல் ரயில் பயணத்தின் போது முற்றிலும் சாத்வீக உணவைப் பெறமுடியும். இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC, பயணத்தின் போது பயணிகளுக்கு சாத்வீக உணவை வழங்க இஸ்கானுடன் கைகோர்த்து உள்ளது. இதன் கீழ் சாத்வீக உணவு உண்ணும் பயணிகளுக்கு இஸ்கான் கோயிலின் கோவிந்தா ரெஸ்டோரன்ட் என்ற உணவகத்தில் ஆர்டர் செய்ததை அடுத்து, அவர்களது இருக்கைகளுக்கு டெலிவரி செய்யப்படும்.

IRCTC மற்றும் ISKCON இடையிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ் இச்சேவை இப்போது டெல்லியிலுள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்தில் கிடைக்கிறது. இந்நிலையில் நீண்டதூர பயணம் போகும் பயணிகள் (வெங்காயம், பூண்டு சாப்பிடாத பயணிகள்) பேண்ட்ரி காரிலிருந்து கிடைக்கும் உணவை தவிர்க்கின்றனர். எனினும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின், அத்தகைய பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என ரயில்வே வாரியமானது தெரிவித்துள்ளது. ஆ

கவே நீங்கள் (அ) உங்கள் குடும்பத்தினர் ரயில் பயணத்தின்போது சாத்வீக உணவை சாப்பிட விரும்பினால், IRCTC இ-கேட்டரிங் இணையதளம் (அ) புட் ஆன் ட்ராக் செயலியில் உணவை முன் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பாக PNR எண்ணுடன் ஆர்டர் செய்ய வேண்டும். ஆர்டர் செய்த பின், உணவு உங்களது இருக்கைக்கு வந்து சேரும். இதனிடையில் கோவிந்தா உணவகம் வழங்கும் உணவில், பயணிகளுக்கு ஓல்ட் டெல்லியின் வெஜ் பிரியாணி, டீலக்ஸ் தாலி, மகாராஜா தாலி, தால் மக்கானி, பனீர் உணவுகள், நூடுல்ஸ் மற்றும் பிற சாத்வீக உணவுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |