Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

25,690 பேருக்கு சம்பள உயர்வு….. 50,000 பேருக்கு இலவச மின் இணைப்பு…. அரசின் அசத்தல் அறிவிப்பு …!!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரித்து அறிவிப்பு விட்டிருக்கிறார். அரசின் இந்த அறிவிப்பால் 25 ஆயிரத்து 690 பணியாளர் பணி பெறுவார்கள் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு வருகின்ற ஏப்ரல் முதல் 500 ரூபாய் ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அதே போல் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

அதே போல மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதற்குப் பிறகு அமைச்சர் தங்கமணி ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த வருடம் 50 ஆயிரம் புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். இதில் 25 ஆயிரம் பேருக்கு விரைந்து விவசாய மின் இணைப்பு பெரும் வகையில் தக்கல் முறையில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Categories

Tech |