விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மொத்தம் 21 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்ட நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் வெளியேறி 11 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் அசீமை சீன் கிரியேட் செய்யாமல் உன் வேலையை பாரு என கடுமையாக கூறியுள்ளார் ஏ டி கே. மேலும் யாரும் சிரிக்க வேண்டாம் என்றும் மீறி சிரித்தால் அசிங்கமாக கேட்பேன் எனவும் கூறியுள்ளார். அவரின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.