திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு இளநிலை செயலக உதவியாளர், கீழ்பிரிவு எழுத்தாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பல காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு நமது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. எனவே கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், தேர்விற்கு விண்ணப்பித்ததற்கான நகல் , ஆதார் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட தொழில்நெறி வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்” என அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.