தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவரை பாரதிய ஜனதா கட்சியின் 5 மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைவ்ருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய கட்சியின் தேசிய தலைமை , மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின்படி எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார். இதில் பொன் ராதாகிருஷ்ணன் , சி பி ராதாகிருஷ்ணன் , நைனார் நாகேந்திரன் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.