இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை தனி விமானம் செல்கின்றது.
உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 5000த்திற்கும் மேல் உயிரிழந்துள்ளனர். சீனாவை தொடர்ந்து அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்திருக்கும் நாடு இத்தாலி .
இந்நிலையில் இங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நாளை செல்கிறது என்று மத்திய விமான போக்குவரத்து துறை இணைச் செயலாளர் ரூபினா அலி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இத்தாலியில் சிக்குள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையையடுத்து ஏர் இந்தியா விமானம் நாளை இங்கிருந்து சென்று இந்தியர்களை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்புகின்றது.