வாரிசு திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை அகிம்சா என்ற டைமண்ட் நிறுவனம் பெற்றிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகி இருக்கின்றது. பிரிட்டனில் 100 பகுதிகளில் முன்பதிவு ஆரம்பமான நிலையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. ரசிகர்களின் இவ்வளவு ஆர்வத்தை பார்க்கும் போது விஜயின் மற்ற திரைப்படங்களை விட இந்த படம் வெளிநாட்டில் வசூல்களை முறியடிக்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.