Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி ஆதார் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் ஆதார் மூலம் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதிலளித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டையை பயன்படுத்தி நாட்டில் எந்த ரேஷனிலும் பொருள்களை வாங்க முடியும். மேலும் இந்தத் திட்டத்தால் பயோமெட்ரிக் அங்கீகாரம் கொண்ட ஆதார் கொண்டும் பொருட்களை பெற முடியும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |