புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிப்பதற்கு வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டன.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகள் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அத்தியாவசிய சான்று, இணைப்பு கல்லூரி ஒப்புகைச் சான்று, மருத்துவமனை விவரங்கள் மற்றும் கல்வி கட்டண விவரங்கள் அனைத்தையும் இணைத்து விண்ணப்பங்களை டிசம்பர் 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.