போலீஸ் சூப்பிரண்டு போதை பொருட்களை ஒழிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீரென மோட்டூர், கீழ்மொனவூர், அப்துல்லாபுரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? பொதுமக்கள் போதை பொருட்களை பயன்படுத்துகின்றார்களா? என சோதனை செய்தார்.
மேலும் மக்களிடமும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்பதை கேட்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதையடுத்து அவர் காட்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.