Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா….. 890 பேர் மீட்பு… மத்திய அரசு தகவல் ….!!

கொரோனாவால் 81 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. அதே போல கொரோனா பாதிப்பு குறித்து நிறைய வதந்திகள் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில்மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் , சுகாதாரத்துறை அமைச்சகம் , விமான போக்குவரத்து துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகத்தின் சார்பில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

Image result for கொரோனா இந்தியா

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது என்று உறுதிபடுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக இருந்த நிலையில் கர்நாடகா ,மகாராஷ்டிரா ,டெல்லி ஆகிய மாநிலத்தில் தலா ஒருவர் என புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 உயர்ந்து 81 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா – பங்களாதேஷ் இடையேயான சாலை மார்க்க போக்குவரத்து ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் வரை முழுமையாக தடை விதிக்கப்படுகின்றது என்றும் , இந்தியாவில் இருந்து 890 மீட்டு வரப்பட்டுள்ளார்கள் என்றும் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |