செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத்தானே சுய பெருமை பேசிக்கொள்கிறார். இவருடைய திருவாய் மலர்ந்த ஓரிரு வாரங்களில் அரங்கேற சில முக்கிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே நான் தோலுரித்துக் காட்டுகிறேன். பிரபல தமிழ் நடிகர் நடத்தி வந்த Black Sheep என்ற youTube சேனலை ஆளும் கட்சியின் வாரிசு ஒருவர் வாங்கியதாக தெரிகிறது.
அந்த சேனலின் சர்வர் அறையில் பாலாஜி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஆனால், காவல்துறை இதுவரை நேரடியாக விசாரிக்கவில்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவத்தில் தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.