Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் ”எல்.கே.ஜி., யு.கே.ஜிக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. 

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையடுத்து வரும் 16ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க அரசால் முடிவு எடுக்கப்பட்டு இந்த சுற்றைக்கை பள்ளிக் கல்வித் துறை ஆணையர்  சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் , அனைத்து வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு தரப்பினர் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்தி இருந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும் , பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |