Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்..!! வனத்துறை அதிகாரி பகிர்ந்த அரிய வீடியோ…? இணையத்தில் வைரல்…!!!!!

வனத்துறை அதிகாரி பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் அரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் அடிக்கடி வனவிலங்கு தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் தற்போது ஒரு வெள்ளை சிங்க குட்டி தனது குடும்பத்துடன் காட்டில் உலா வரும் ஒரு சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவின் தலைப்பில் கூறியதாவது, “இதோ உங்களுக்கான ஒரு வெள்ளை சிங்க குட்டி. உலகில் மூன்று வெள்ளை சிங்கங்கள் மட்டுமே காட்டில் சுதந்திரமாக வாழ்கிறது என நம்பப்படுகிறதாக” கூறியுள்ளார்.

https://twitter.com/susantananda3/status/1603251844892872706?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1603251844892872706%7Ctwgr%5Ec007c3ed53004ee16709f8b1fc88322dd6377d09%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fcmsadmin.dailythanthi.com%2F

 

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் புதர்கள் மற்றும் பாறைகள் நிறைந்த காட்டுப்பகுதியில் சிங்கம் ஒன்று கம்பீரமாக காட்டில் நடப்பதையும் அதன் குட்டிகள் அங்குமிங்கும் ஓடுவதையும், அதன் தாய் சிங்கத்தை பின் தொடர்வதையும் காண முடிகிறது. இதனையடுத்து வனத்துறை ட்விட்டர் பதிவின்படி, மீதமிருப்பதாக  கூறப்படும் மூன்று வெள்ளை சிங்கங்களில் இந்த வெள்ளை குட்டியும்  ஒன்று. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

Categories

Tech |