அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் ஒன்றுதான் பிஎப் ஆகும். பிஎப் வாயிலாக அரசு வேலை செய்யும் மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த சேமிப்பு தொகையை ஓய்வுகாலத்தில் பயன்படுத்தலாம்.
EPF-ல் பங்களிக்கும் அனைத்து பணியாளர்களும் பல முறைகளைப் பயன்படுத்தி தங்களது கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். கணக்கிலுள்ள நிலுவையை கண்டறிய, ஆண்டின் இறுதியில் பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி (EPF) விவரங்களை பகிர்ந்துகொள்வதற்காக அவர்கள் தங்கள் முதலாளி (அ) அலுவலகத்துக்காக காத்திருக்கத் தேவையில்லை. பணியாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 2021-22ம் வருடத்திற்கு 8.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.