Categories
அரசியல் மாநில செய்திகள்

நாள் குறிச்சாச்சு..! வார்டுக்கு 100 பேர்…. மொத்தம்1500 பேர் ….. ADMK செய்ய போகும் சம்பவம் !!

உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திமுக அரசுக்கு எதிரான போராட்டத்த்தை மக்களே எதிர்பார்க்கிறார்கள்.  கல்யாண வீட்டுக்கு போனாலும், அதைப் பற்றிய பேச்சாக இருந்தது, மிகப்பெரிய வெற்றியாகி விட்டது. அதேபோல இது மக்களுக்கான போராட்டம்.  ஒவ்வொரு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்…  ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்… எனவே சிறப்பான முறையில் செய்ய வேண்டும்.

போராட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி உடனே கொடுத்து விடுங்கள். ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்சம் 2000 பேர் இருக்க வேண்டும்.  ஒரு பேரூராட்சியில் 2000 பேர் பங்கு கொள்ள வேண்டும்.  பேரூராட்சி குறைந்தபட்சம்  15 வார்டு இருக்கிறது.  அதில் ஒரு வார்டுக்கு கிட்டத்தட்ட 100 பேர் போட்டால் கூட 1500 பேர் வரும், 2000 பேர் என்பது சாதாரணமாக வந்து விடும். ஆர்ப்பாட்டத்துக்கு பேனர் வைங்க,  போஸ்டர் ஒட்டுங்கள்,  துண்டு பிரச்சாரம் செய்யுங்கள்.    ஆர்ப்பாட்ட வால் போஸ்டர்கள் எல்லா பக்கமும் ஒட்ட வேண்டும்,  எல்லா வீதியிலும் ஒட்ட வேண்டும்.

அதேபோல நோட்டீஸ் எல்லா வீட்டிற்கும் சென்று கொடுக்க வேண்டும். எந்த ஒரு வீடும் மிஸ்  ஆக கூடாது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள்  எல்லாருக்குமே கலர் கொடியை வைத்துக் கொள்ளுங்கள். கண்டிக்கின்ற வாசகங்களை கையில் வைத்துக் கொள்ளுங்கள். பேரூராட்சியில் நாம தான் எல்லா சாலையும் போட்டு இருக்கிறோம். எல்லா தி௦ட்டங்களும் கொண்டு வந்திருக்கிறோம். அதெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.  குறித்து வைத்து எடுத்து சொல்லுங்கள்.  திமுககாரர்கள் எதுவுமே செய்யவில்லை என்று சொல்லுங்கள்.இப்போது எது செய்தோம் என்றும் சொல்லுங்கள்..இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையும் வையுங்கள்.ஒவ்வொரு ஊராட்சிகளிலும்,  யூனியன் செய்யும்போது ஒவ்வொரு யூனியனுக்கு குறைந்தபட்சம் 3,000 பேர் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |