Categories
மாநில செய்திகள்

இதற்கு முடிவே இல்லையா?…. சூதாட்டத்தால் “உயிரை விட்ட வாலிபர்”…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

 வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நமது தமிழ்நாட்டில் தினம் தோறும் பலர்  சூதாட்டத்தில் தங்களது   பணத்தை இழந்து வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருக்கும் அவர்கள் தான் மட்டுமில்லாமல் தனது குடும்பத்திற்கே விஷம் கொடுத்து தற்கொலை செய்கின்ற நிகழ்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்று  சூதாட்டத்திற்கு தடை சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு  ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார்  கல்லூரியில் வினோத் குமார் என்பவர் படித்து வந்துள்ளார். இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு அதிக  பணத்தை இழந்துள்ளார் ‌. ஆனாலும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார். ஆனால் அவரால் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை முடியவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் இன்று கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக போலீசாருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |