Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் அம்மாவுக்கு கடைசி கடமையை கூட செய்யவிடல’…. இயக்குனர் பாலா பற்றி பிரபல நடிகர் பகீர் கருத்து….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது.

இதனையடுத்து, நான் கடவுள் படத்தில் ஆர்யாவுக்கு அப்பாவாக நடித்த அழகன் தமிழ்மணி இவரை பற்றி பகீர் தகவலை கூறியுள்ளார். அதில், இந்த படத்தில் நடிப்பதற்கு தாடி வளர்க்க வேண்டும் என பாலா கூறியுள்ளார். பாலா சொன்னபடியே அவரும் தாடி வளர்த்துள்ளார். நான் கடவுள் படத்தின் படபிடிப்பை இயக்குனர் பாலா 3 ஆண்டுகள் நடத்தி இருக்கிறார்.

இந்த படப்பிடிப்பிற்கு இடையில் அழகன் தமிழ்மணியின் தாயார் இறந்து விட்டாராம். அவரின் கடைசி சடங்கிற்கு மொட்டை அடித்து தாடியை எடுக்க வேண்டும் என அழகன் தமிழ்மணி பாலாவிடம் கூறியுள்ளார். அதற்கு பாலா அப்படி செய்தால் இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும் என கூறியுள்ளார். இதனால் தன் தாய்க்கு செய்ய வேண்டிய கடைசி கடமையை  கூட தன்னால் செய்ய முடியவில்லை என ஒரு பேட்டியில் அழகன் தமிழ்மணி கூறியுள்ளார்.

Categories

Tech |