இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த மாநிலத்தில் இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. சீனாவில் வூஹான் நகரில் தொடங்கி 127 நாடுகளில் குடியிருக்கும் கொரோனா வைஸ் நாளுக்குநாள் மக்களை காவுவாங்கி வருகிறது. இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பிடித்து வைத்து மிரட்டுகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென்கொரியா, தாய்லாந்து, ஆகிய நாடுகளில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் குடியிருந்து மிரட்டும் கொரோனா வைரஸிற்கு 81 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், ராஜஸ்தானில் 17 பேரும், கேரளாவில் 17 பேரும், மகாராஷ்டிராவில் 16 பேரும், உத்தரபிரதேசத்தில் 11 பேரும், டெல்லியில் 6 பேரும், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 4 பேரும், லடாக்கில் 3 பேரும், தெலங்கானா, காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.