Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழகத்தில் விஜய் தான் NO.1″….. உதயநிதி கிட்ட பேச போறேன்…. கொந்தளித்த தில் ராஜு…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வாரிசு திரைப்படத்தை 7 கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் வெளியிடுகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தை விட துணிவு அதிக திரைப்படங்களில் தமிழகத்தில் ரிலீசாக போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி துணிவு திரைப்படம் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறதாம். இந்த சூழ்நிலையில் தயாரிப்பாளர் ராஜு நேர்காணல் ஒன்றில் தமிழகத்தை பொறுத்தவரை அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். அப்படி இருக்கும்போது துணிவு படத்திற்கு கூடுதல் தியேட்டர் ஒதுக்காமல் வாரிசு படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கியுள்ளனர். இது வியாபாரம். ‌ இது தொடர்பாக நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து பேசப்போகிறேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் தமிழகத்தில் சரிசமமான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |