Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது”…. தங்கையை மிரட்டிய அண்ணன்…. போலீஸ் விசாரணை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தோப்பன் லைன் பகுதியில் கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா(28) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கோகிலா அடிக்கடி காந்தல் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று வருவது அவரது அண்ணன் அருண்குமாருக்கு(30) பிடிக்கவில்லை. இதனால் நீ வீட்டிற்கு வருவது தொந்தரவாக இருக்கிறது என அருண்குமார் தனது தங்கையிடம் கூறிய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து நேற்று மீண்டும் கோகிலா தனது தாய் வீட்டிற்கு வந்தபோது இனிமேல் வீட்டிற்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என அருண்குமார் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கோகிலா ஊட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் அதிகப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |