Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்போ வெறும் 6 காலேஜ்….. இப்போ 506 காலேஜ் இருக்கு: இதனால தான் காரணம் …!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கைக்கான காரணத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஸ்கில் டேவலப்மன்ட் என்று ஸ்கில் ஸ்டேட்மென்ட் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதற்காக 60 கோடி ரூபாய் அரசாங்கமே கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறமைகளை வளர்ப்பதற்கு,  துறைகளை வளர்ப்பதற்கு முதலமைச்சர்  ஒதுக்கி இருக்கின்றார். அந்த அடிப்படையில் வருகின்ற காலங்களில் பொறியியல் கல்லூரிகள்அனைத்தும் வளர்ச்சி பெறும்.

குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளும் வளர்ச்சி பெறும். தொழிற்சாலைகளோடு  தொடர்பு கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் அதற்கான துறைகளில் பயிற்சிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் படிக்கின்ற காலத்தில் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பது என்பது ரொம்ப கஷ்டமான காலம் உண்டு. அப்போது 6 காலேஜ் தான். ஆனால் இப்பொழுது நிறைய பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.

506 கல்லூரிகள் இருக்கின்றன. அதனால் சில கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்திருக்கின்றது. அதனால் அவர்களை எல்லாம் சேர்ப்பதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். போன வருடத்தைவிட இந்த வருடம் அதிகமாக சேர்ந்துள்ளார். வருங்காலத்தில் இன்னும் அதிகம் சேருவார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுப்பதற்கான முறைகளையும் தமிழக முதல்வர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவையெல்லாம் நடக்கும்.

விளையாட்டு துறையாக இருந்தாலும்,  இளைஞர்களை வளர்கின்ற திறமையாக இருந்தாலும்… இளைஞர்கள்,  விளையாட்டு துறைக்கெல்லாம் உதயநிதி அமைச்சர் பொறுப்பு ஏற்று இருப்பது…  கல்வி துறையோடு… அது  ஆரம்பப்பள்ளி ஆக இருந்தாலும், உயர்கல்வி துறையாக இருந்தாலும், அதோடு தொடர்புடைய துறைகள் தான் நிச்சயமாக மிக சிறப்பாக செயல்படுவார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |