மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை அரங்கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, சித்தா பிரிவு, ஆய்வகம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
அப்போது மருத்துவமனையில் உள்ள 16 மருத்துவர்களில் எந்த அறிவிப்பும் இல்லாமல் பணிக்கு வராமல் இருந்த மயக்கவியல் மருத்துவர் பிரபாவடிவுக்கரசி, மகப்பேறு மருத்துவர் மிர்லின், எலும்பு முறிவு மருத்துவர் ஹர்ஷா பாலாஜி மற்றும் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் கிருத்திகா ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரவாமணி இதை கண்காணிக்காத காரணத்தினால் பணியிட மாறுதல் செய்யுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.