Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…முயற்சி வெற்றியாகும்… வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்..!!

மேஷம் ராசி  அன்பர்களே..! சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாளாகவே இருக்கும். தனவரவு திருப்திகரமாகவே இருக்கும். நூதன பொருட்களை வாங்கி சேர்க்க நூதன முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன் கொஞ்சம் கூடும்.

உடல் நிலையில் பாதிப்புகள் கூட ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கொஞ்சம் முயற்சியின் பேரில் இருந்தால் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி தான் முன்னேற வேண்டியிருக்கும் பாடங்களை கவனமாக படியுங்கள், படித்த பாடத்தை எழுதி பாருங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |