தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- பாடலான ரஞ்சிதமே தீ தளபதி போன்றவைகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நேர்காணல் நிகழ்ச்சியில் தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார். அவருக்கு தான் அதிக தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக நான் உதயநிதியை சந்தித்து பேச போகிறேன் என்று கூறியதுதான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. அதன் பிறகு தில்ராஜு வாரிசு படத்தின் கதையை முதலில் மகேஷ்பாபுவிடம் கூறியதாகவும் சொல்லியுள்ளார். ஆனால் மகேஷ்பாபு படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டதால் ராம்சரணிடம் பேசியுள்ளனர். ஆனால் ராம்சரண் சங்கர் படத்தில் பிஸியாக இருந்ததால் அவரும் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனால் அல்லு அர்ஜுனிடன் படத்தின் கதையை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவரும் வாரிசு படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். இதனையடுத்து தான் தளபதி விஜயிடம் வாரிசு படத்தின் கதையை சொல்லியிருக்கிறார்கள். படத்தின் கதையைக் கேட்ட நடிகர் விஜயும் வாரிசு படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தில் ராஜு கூறியுள்ளார். மேலும் தெலுங்கு டாப் ஹீரோக்கள் அனைவரும் நடிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், தளபதி விஜய் மட்டும் வாரிசு படத்தில் எதற்காக நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது தான் தற்போது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.