தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தன்யா பாலகிருஷ்ணன். சென்ற 2011 ஆம் வருடம் சூர்யா நடிப்பில் வெளியாகிய 7ம் அறிவு படத்தின் வாயிலாக அறிமுகமான இவர் காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார்.
மேலும் தெலுங்கில் நாயகியாகவே நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்ததால் அங்கு தன்யா பல படங்கள் நடித்து வருகிறார். எனினும் கொரோனா காலக்கட்டத்திற்கு பின் தன்யாவை படங்கள் பக்கம் காண முடியவில்லை. இந்நிலையில் தெலுங்கு சினிமா நடிகை கல்பிகா தன் யூடியூப் பக்கத்தில், நடிகை தன்யாவிற்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகனுடன் ரகசிய திருமணம் நடந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.