திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை வடபழனியில் நண்பர்களுடன் வாடகை வீடு எடுத்து தங்கி சினிமா துறையில் கேமராமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜீவ்காந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜீவ் காந்தியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சினிமா துறையில் கேமராமேனுக்கு உதவியாளராக ராஜீவ்காந்தி வேலை பார்த்து வந்துள்ளார்.
அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த காதல் தோல்வியில் முடிவடைந்ததால் மன உளைச்சலில் ராஜீவ் காந்தி வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு அறையிலேயே இருந்துள்ளார். பின்னர் நண்பர்கள் வெளியே சென்ற சமயத்தில் ராஜீவ் காந்தி தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து ராஜீவ் காந்தி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. காதல் பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த முடிவை எடுத்துள்ளேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.