சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பூந்தமல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை நேற்று ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் கூறியதாவது, போலீசார் வேலை நேரத்தில் செல்போன் உபயோகப்படுத்த கூடாது. வேலை நேரம் முடிந்த பிறகு தான் செல்போனை உபயோகிக்க வேண்டும். யாரும் தேவையில்லாமல் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட வேண்டாம்.
அரசாங்கம் சம்பளம் கொடுப்பதால் அரசாங்க வேலையை மட்டும் தான் பார்க்க வேண்டும். ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, மதுவிலக்கு என மூன்று பிரிவையும் இணைத்து புறக்காவால் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.