தமிழகத்தில் பால் விலையை தொடர்ந்து நெய் விலையையும் ஆவின் நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலை அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட், தயிர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பால் பொருட்களின் விலை உயர்வுக்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை 580 ரூபாயிலிருந்து 630 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவி நீர் 5 லிட்டர் நெய் பாட்டில் 2900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 3250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 500 மில்லி லிட்டர் நெய் 290 ரூபாயிலிருந்து 315 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டர் நெய் 130 ரூபாயிலிருந்து 145 ரூபாயாகவும், 100 ml 70 ரூபாயிலிருந்து 75 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆவின் வெண்ணெய் விலையும் ஆவின் நிறுவனம் திடீரென உயர்த்தியுள்ளது. 500 கிராம் கொண்ட குக்கிங் வெண்ணெய் 250 ரூபாயில் இருந்து 260 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. 100 கிராம் வெண்ணெய் 52 ரூபாயில் இருந்து 55 ரூபாயாக விற்கப்பட்டு வருகின்றது.