Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியில் “சர்க்கார் வித் ஜீவா”… எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகிறது தெரியுமா..???

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சர்க்கார் வித் ஜீவா நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜீவா, இவர் சில மாதங்களுக்கு முன்பு ஓடிடிக்காக புதிய கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி ஆகா என்ற ஓடிடி தளத்தில் சர்க்கார் வித் ஜீவா என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் சேனல் ஒளிபரப்ப இருக்கின்றது. இதற்கான புரோமோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல் எபிசோடில் காமெடி நடிகர்களான ரோபோ சங்கர், ஜெகன், பாலா சரவணன், கேபிஒய் தீனா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தார்கள். இனி வாரம் தோறும் சனிக்கிழமை இந்த நிகழ்ச்சியானது இரவு 08.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது. மேலும் கலர்ஸ் தமிழ் ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பாகும்.

Categories

Tech |