Categories
உலக செய்திகள்

அவசர அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம்..! மீட்கப்பட்ட 2 சடலம், 2 பேருக்கு உடல் நலக்குறைவு.!!

கொழும்பு: சவுதி அரேபியாவில் இருந்து இந்தோனோசியா சென்று கொண்டிருந்த  விமானம்  ஒன்று நேற்று அதிகாலை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக  தரையிறங்கபட்டது.

பின்னர் அந்த விமானத்தில் இருந்து இறந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த விமானத்தில் வந்த 2 பேர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் நீர்கொழும்பு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்கப்படுவர்  என்று போலீசார் தெரிவித்தனர்.

இவர்களுக்கு கொரானா தோற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இறந்தவர்களின் சடலங்கள் உடற்கூர் ஆய்விற்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Categories

Tech |