Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் சிவாஜியை மிஞ்சிய ஓபிஸ்…! ஓபிஎஸ்ஸின் குஜராத் பயணம்…. கொளுத்தி போட்ட AIADMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்றது….  ஓபிஎஸ்சிக்கும் கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. நீக்கப்பட்டவர் நீக்கப்பட்டவர் தான். அதில் எந்த மாறுபட்டகருத்தும் கிடையாது. ஓபிஎஸ்_க்கு அழைப்பு கொடுத்தார்களா ? அழைப்பு கொடுக்கவில்லையா என  தெரியாது.  ஓபிஎஸ்_ஸை பொறுத்தவரை பந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்பது போல கூப்பிடாமல் போயிட்டு, எல்லாத்துலயும் கலந்து கொள்வார்.

திருமண வீட்டுக்கு போனால் மணமகன் ஆகவும்,  சவத்துக்கு போனாலும் பிண மகனானாலும் அழகா நடிக்கக்கூடிய வல்லமை பெற்றவரு.  சிறந்த ஆஸ்கார் அவார்டுக்கு சொந்தக்காரர் என்று சொல்லக்கூடிய  கைதேர்ந்த நடிகர். ஓபிஎஸ் அண்ணன் சிவாஜிக்கு முன்னாடி பிறந்திருந்தா ? இவர் தான் பெரிய அளவுக்கு தேசிய நடிகராக… செவ்வாளியாராக…

உலகத்துல ஆஸ்கார் அவார்டு பெறக் கூடியவராக  புகழ் பெற்று இருப்பாரு. ஆனா என்ன பண்றது ?  பின்னாடி பறந்துட்டாரு. ஆனா அரசியல்ல பிரமாதமா நடிப்பாரு. ஓபிஎஸ் நடிப்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. குஜராத்தில் பதவியேற்பு விழாவுக்கு ஓபிஎஸ் போனாரு. அதுக்கு எங்களுக்கு சம்பந்தம் கிடையாது. அது அவருடைய விருப்பம்.. ஓபிஎஸ் போனதுக்கு   கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தெரிவித்தார்.

Categories

Tech |