Categories
சினிமா தமிழ் சினிமா

கால் விரல்கள் அகற்றம்?…. மெலிந்து காணப்படும் விஜயகாந்த்…. அடுத்தடுத்து வந்த நியூஸ்…. வருத்தத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் திரையுலகில் சில நடிகர்களுக்கு மக்கள் மனதில் தனிஇடம் இருக்கும். அதுபோன்ற ஒரு நடிகர் தான் விஜயகாந்த். திரையுலகில் பல்வேறு படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ, அதுபோன்று அரசியலிலும் ஈடுபட்டு நன்றாக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் வீட்டில் முடங்கினார்.

இந்நிலையில் விஜயகாந்தின் காலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகமானது அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன் காரணமாக விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் விஜயகாந்த் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஏனெனில் அந்த புகைப்படத்தில் விஜயகாந்த் உடல் மெலிந்து காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |