Categories
மாநில செய்திகள்

மாடுகளை காப்பாற்றனும்…. உடனே தடுப்பூசி அனுப்புங்க…. மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கால்நடைகள் அதிக அளவில் கோமாரி நோயினால் பாதிக்கப்படுகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசால் தடுப்பூசிகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய 90 லட்சம்  தடுப்பூசிகள் இன்று வரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில்   நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் மத்திய அரசு விரைவில்  தடுப்பூசியை வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் அளவு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர்  மத்திய அரசுக்கு கடிதம்  எழுதியுள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |