கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெங்களூரு இன்போசிஸ் நிறுவனம் காலி செய்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் இந்தியாவிலும் பீதியை கிளப்பி வருகிறது. உலகளவில் 1.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் , 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன.
அந்த வகையில் பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு இருப்பது உறுதியாகி உள்ளதாக எழுந்த தகவலைய டுத்து நிறுவனம் காலி செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதில் , ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். தவறான வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.