மின்வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு மக்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவித்தது. இதற்காக பல மாவட்டங்களில் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கு வருகின்ற 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என பலர் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தமிழக மின்வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் 4-வது ஆப்ஷனாக என்.ஆர். ஐ. பதிவிற்கான புதிய வசதி செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.