தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சுமத்தியதோடு, வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதோடு கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சின்மயி குற்றம் சாட்டிய நிலையில், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் விஜே அர்ச்சனா கவிஞர் வைரமுத்துவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதோடு அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை தற்போது பாடகி சின்மயி தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து வைரமுத்துவிடம் கவனமாக இருங்கள். அவரை சந்திக்க செல்லும்போது தனியாக செல்லாதீர்கள். யாரையாவது உடன் அழைத்துச் செல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார். அதோடு முதலில் இப்படி தான் ஆரம்பிக்கும். அவரை விட்டு கொஞ்சம் தள்ளியே இருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் கவிஞர் வைரமுத்துவின் மீது சின்மயி தொடர்ந்து பாலியல் புகார் தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.