Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பெட்ரோல் கிடுகிடு உயர்வு…. சொன்னது ஒன்னு…. நடந்தது ஒன்னு…. பொதுமக்கள் வேதனை …!!

பெட்ரோல் , டீசல் விலை மேலும் 3 உயர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்து வந்தன. பெட்ரோல் டீசல் விலையை மேலும் குறைக்க ராகுல் ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிகை வைத்தனர்.

ஆனால் கோரிக்கைக்கு நேர்மாறாக கலால் வரியை மத்திய அரசு ரூ 3 அதிகரித்ததால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 உயர்கிறது. விலையை பெருமளவு குறைக்க கோரிக்கை எழுந்து வந்த நிலையில் மத்திய அரசு முடிவால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Categories

Tech |