திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாசர் அண்ணன் பேசும்போது சொன்னார்கள்…. இளைஞர் அணி அமைப்பாளராக நம்முடைய தலைவர் அவர்கள், இப்போது முதல்வர்.. அப்போது மாநில இளைஞரணி அமைப்பாளராக இருக்கும்போது… நம்முடைய ஆவடி நாசர் அவர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்தார்.
இப்போது நம்முடைய தலைவர் முதலமைச்சராகிவிட்டார், நம்முடைய நாசர் அவர்கள் அமைச்சராகிவிட்டார். அவர் அமைச்சரானாலும், அதற்கு முன்பு மாவட்ட அமைப்பாளராக இருந்தார். மாவட்ட செயலாளர் ஆக இருந்தார்கள். ஆனால் எப்போதும் இளைஞர் அணிக்கு ஊக்கம் அளிக்க கூடிய வகையில்… இளைஞர் அணிக்கு, இளைஞர் அணி தம்பிமார்களை அரவணைத்து கழகப் பணியில் எப்பொழுதுமே செய்வார்…
இளைஞர் அணியில் இருந்து வந்ததனால் அந்த கஷ்டம் அவருக்கு தெரியும். எல்லா மாவட்டங்களில் இளைஞர் அணியில் இருந்து மாவட்ட செயலாளர் வந்தால், பெரிய வசதியாக இருக்கும். எல்லா மாவட்டத்திற்கும் அப்படி அமையாது. எனவே இங்கு இருக்கக்கூடிய இளைஞரணி தம்பிமார்கள்… உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்வது… உங்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக நம்முடைய நாசர் அண்ணன் அவர்களை பார்த்து உழைக்க கற்றுக்கொள்ள வேண்டும், கழக பணி ஆற்ற கற்றுக் கொள்ள வேண்டும்.
உங்கள் உழைப்பிற்கு கண்டிப்பாக அந்த மரியாதை கொடுக்கப்படும். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் ? நான் இளைஞரணியில் இருந்து வந்தவன் தான், இப்போது அமைச்சராக இருக்கிறேன். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரே திமுக இளைஞரணியில் இருந்து பாடுபட்டு, மக்கள் பணியாற்றி வந்தவர் என தெரிவித்தார்.