Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா!… இம்புட்டு ஸ்பெஷலா…. வாட்ச் விலையை சொல்லி அதிர வைத்த பாஜக அண்ணாமலை…. ஆடிப்போன அரசியல் கட்சிகள்….!!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரம் குறித்து சமீப காலமாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் தற்போது அது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தற்போது நான் ஓட்டும் கார், சட்டை, வேஷ்டி, கைக்கடிகாரம் போன்றவைகள் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் கைகளில் அணிந்து இருப்பது ரபேல் விமானத்தின் உதிரிபாகங்களில் இருந்து செய்யப்பட்ட சிறப்பு கைகடிகாரம். ரபேல் விமானத்தை தயாரித்த நிறுவனம் அதன் உதிரிபாகங்களை வைத்து மொத்தம் 500 கைக்கடிகாரங்களை செய்த நிலையில்  நான் 149-வது  கைக்கடிகாரத்தை நான் வாங்கியுள்ளேன்.

எனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. எனவே என் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட இந்த கைக்கடிகாரம் என்னுடைய உடம்பில் இருக்கும். நான் ஒரு தேசியவாதி என்று கூறினார். ரபேல் நம்முடைய நாட்டுக்கு மிக கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்று கூறினார்.  இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ. 5 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அண்ணாமலை தான் கையில் கட்டி இருக்கும் கைகடிகாரத்தை பற்றிய உண்மையை மறைக்காமல் வெளிப்படையாக  பேசியது தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |