Categories
அரசியல் மாநில செய்திகள்

“மக்களால் நிராகரிக்கப்பட்ட பூனைகள் தனக்குத்தானே அறிக்கை வெளியிடுறாங்க”….. இபிஸ்-க்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது என்றும், ஒருவேளை நிலம் கையகப்படுத்தப்பட்டால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன் பிறகு திமுக அரசு விவசாயிகளின் விருப்பமின்றி வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று அரசாணை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு தன்னுடைய எதிர்ப்புதான் காரணம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, அன்னூர் பகுதியில் விவசாயிகளின் விருப்பமின்றி நிலம்  கையகப்படுத்தப்பட மாட்டாது என வெளிப்படையாக அறிவித்துள்ள விவசாய பாதுகாவலர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவை விவசாயிகள் மனப்பூர்வமாக வரவேற்கின்றனர். நன்றி தெரிவிக்கின்றனர். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய தூத்துக்குடி ஏழை மக்களின் மீது துப்பாக்கியால் சுட்டு பிணங்களின் மீது ஆட்சி நடத்தியவர். அரசின் இந்த அறிவிப்புக்கு நானே காரணம் என்று கூறி தனக்குத்தானே அறிக்கை வெளியிட்டு சொறிந்து கொள்வது அறியாமை. மேலும் மக்களால் நிராகரிக்கப்பட்ட பூனைகள் கண்களை மூடினால் உண்மை இரண்டு விடுவதில்லை என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |