Categories
அரசியல் மாநில செய்திகள்

“என் சொத்துக்கள் முழுதும் அரசிடம் ஒப்படைக்கப்படும்”…. பாஜக அண்ணாமலையின் அதிரடி அறிவிப்பால் ஆடிப்போன திமுக…..!!!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் அண்ணாமலை தன்னுடைய வாட்ச் விவகாரத்திற்கு தற்போது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுகவினர் என்னுடைய ஊழல் குறித்து விவாதிக்க ஆர்வமாக இருப்பதால் அதை எதிர் கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன். நான் கடந்த வருடம் மே மாதம் என்னுடைய ரபேல் கைகடிகாரத்தை வாங்கினேன்.

அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால என்னுடைய வங்கி கணக்குகளின் பரிவர்த்தனைகள், (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்) ஆகஸ்ட் 2011 முதல் நான் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துக்களின் விவரங்கள், என்னிடமுள்ள ஆடு, மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடியை போற்றும் நம் தமிழக மக்களை சந்திப்பதற்காக நான் மேற்கொள்ள இருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன். அன்றைய தினம் நான் மேல் குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் பத்திரிகையாளர்களை சந்தித்து பொதுவெளியில் வெளியிட இருக்கிறேன்.

நான் அறிவித்ததை விட ஒரு பைசா யாரேனும் அதிகமாக சொத்தை கண்டுபிடித்தால் என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் நான் அரசிடம் ஒப்படைக்கவும் தயார். இதேபோன்று வருமான விபரங்களையும், அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களையும் திமுகவினர் தமிழக சகோதர, சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா என்று பதிவிட்டுள்ளார். மேலும் அண்ணாமலை தன்னுடைய சொத்துக்களின் விவரம் மொத்தத்தையும் பொதுவெளியில் வெளியிடப் போகிறேன் என்று சொன்னது பலரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |