கோவை மாவட்ட அதிமுக ஜனவரி மாதம் நடந்த இருக்கும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய நல் ஆசியுடன் புது வருடம் பிறந்து 2023 3, 5, 9 இந்த 3 தேதிகளில் பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் மக்கள் பிரதிநிதிக்காக ஆர்ப்பாட்டத்தை நம்முடைய பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்கள் இதற்கு முன்னால் அறிவித்தார்கள்.
நம் தலைமையில் மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது. 23 ஜனவரியில் 3, 5, 9 இந்த மூன்று நாட்களுக்கு நடக்கக்கூடிய இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக எப்படி நடத்த வேண்டும் என்று ஆலோசிக்க இந்தக் கூட்டத்தை நடுத்துக்கின்றோம். குறுகிய காலத்திலே இதை ஏற்பாடு செய்த கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகத்தினுடைய செயலாளர், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்,
இந்த மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிகள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அருமை அண்ணன், இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த அருமை அண்ணன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் அவர்களே, இந்த கூட்டத்தை குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த மாநகர் மாவட்ட கழகத்தினுடைய செயலாளர் வடக்கு துறை சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு வளர்ச்சிக்கு இந்த மாவட்டத்தில் உறுதுணையாக இருந்த அரிச்சந்திரன் அவர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 2.12.2022 காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற உண்ணாவிரதம் அற்புதமாக நடந்தது. கோவை மாவட்ட அண்ணா திமுக எப்போது என்ன செய்தாலும் ? அதை திரும்பி பார்ப்பார்கள்.. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில் அந்த உண்ணாவிரதம் இருந்தது. எல்லா தொலைக்காட்சிகளிலும் காமித்தார்கள். அவ்வளவு எழுச்சியாக நிர்வாகிகள் நடத்தி காமித்தீர்கள் என தெரிவித்தார்.