தொடர் மழை காரணமாக பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது/ இதனால் சென்ற ஒன்பதாம் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
மேலும் அதிகபட்சமாக வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரி 35 அடி உயரத்தை கொண்ட நிலையில் 3.231 டி.எம்.சி தண்ணீரை சேமிக்கலாம். அதன்படி நேற்று முன்தினம் காலை ஆறு மணி நிலவரப்படி 34.10 அடியாக பதிவாகி இருக்கின்றது. தொடர் மழை காரணமாக பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.