தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டச் புயல் காரணமாக வட தமிழகத்தில் அதிக மழை பெய்தது. மேலும் வேலூரில் இரண்டு நாட்கள் இடைவிடாது மழை பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் பாலாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் பாலாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்தானது பாலாற்றில் அதிகரித்திருக்கின்றது.
இதன் காரணமாக பாலாற்றின் முக்கிய இடங்கள், பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் கண்காணிக்கப்படுகின்றது. மேலும் ஆற்றின் கரையோரம் இருக்கும் கிராமங்களை வருவாய்த்துறையினர் கண்காணித்து வருகின்றார்கள். மேலும் மாவட்ட நிர்வாகம், யாரும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கின்றது. பாலாற்றுக்கு வந்தடையும் நீரின் அளவு 4,800 கன அடியாக இருக்கின்றது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.