கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் 5 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானிலும் இதன் மரண வேட்டை தொடர்ந்ததையடுத்து உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரசால் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. டெல்லி, கேரளா, கர்நாடகா, தமிழக மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா-19 , கேரளா – 17 என அதிகப்படியான பாதிப்புகளில் உள்ளது. அனைவரையும் தனி வார்டில் வைத்து அந்தந்த மாநில சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றது. இந்நிலையில் மகாராஷ்டிரா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரில் உள்ள மாயோ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 5 பேரை தீடிரென தப்பி ஓடியுள்ளனர். மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய 5 பேரில் ஒருவருக்கு கொரோனா இல்லை என்றும் , 4 பேரின் சோதனை முடிவுக்காக மருத்துவர்கள் காத்திருந்த நிலையில், தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 5 பேரும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்படுவார்கள் என காவல் துறை தெரிவித்துள்ளது.