தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தெற்கு வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்நிலையில் தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருகின்ற 21ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, புதுவை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் டிசம்பர் 22ஆம் தேதி தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.